மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா ஆலோசனை கூட்டம்
மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு ஆலோசனை கூட்டம். நடந்தது. இந்த கூட்டத்துக்கு அருட்சகோதரி கிளாடியா தலைமை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அருட்சகோதரி செல்வி ஆன்றனி அம்மாள் முன்னிலை வகித்து நூற்றாண்டு விழாவின் முக்கியத்துவத்தை பற்றி விளக்கினார். ஆசிரியர் ஜோஸ்பின் வரவேற்றார். ஆசிரியர்கள் மற்றும் முன்னாள் மாணவ, மாணவிகள் தங்களை அறிமுகம் செய்து வைத்து பேசினார்கள். முன்னாள் மாணவர் எட்வர்ட் ராஜ் பேசினார். தொடர்ந்து நூற்றாண்டு விழா திட்டமிடல் மற்றும் கருத்துக்களை முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக நவம்பர் மாதம் 1 ம் தேதி மதியம் 2 மணிக்கு முன்னாள் மாணவர்களுக்கான சிறப்பு கூட்டம் மாடத்தட்டுவிளை புனித அலோசியஸ் தொடக்கப்பள்ளியில் வைத்து நடத்த வேண்டும் என்றும், நூற்றாண்டு விழாவை 2026 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடத்தலாம் என்றும் ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் மாணவர் தங்க மரியான் நன்றி கூறினார். இதில் முன்னாள் மாணவர்கள் மேரி ஸ்டெல்லாபாய், சார்லஸ், லூக்காஸ், அகஸ்டின், ஜாண் கென்னடி, மைக்கேல், மரிய ஆன்றனி உட்பட முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.