குழித்துறை மறைமாவட்டம், காரங்காடு வட்டாரம், காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய வளாகத்தில் குருதிக் கொடை தினம் நடந்தது. குழித்துறை மறைமாவட்ட குருகுல முதல்வர் பேரருட்பணி சேவியர் பெனடிக்ட் தலைமை வகித்தார்.
காரங்காடு வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஜஸ்டஸ், காரங்காடு புனித ஞானப்பிரகாசியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி சுஜின், அருட்சகோதரர் ஹைடன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காரங்காடு வட்டார மேய்ப்புப்பணி பேரவை துணைத் தலைவர் ஹரிதாஸ் வரவேற்றார். செயலாளர் ஜோஸ்பின் அமுதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்தவங்கி மருத்துவ அதிகாரி டாக்டர் ராகேஷ் ரத்ததானம் குறித்தும், சுங்கான்கடை புனித சேவியர் கத்தோலிக்க பல்நோக்கு மருத்துவமனை இயக்குனர் அருட்பணி சார்லஸ் விஜுவ் ஆகியோர் பேசினர்கள்.
முகாமில் மாங்குழி பங்குத்தந்தை சகாய ஜெரால்டு எபின், இணை பங்குத்தந்தை ரீகன், மைலோடு இணை பங்குத்தந்தை டேனியல், காரங்காடு மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் கட்டிமாங்கோடு ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவருமான பெலிக்ஸ்ராஜன் உட்பட இளைஞர்கள் இளம்பெண்கள் உட்பட பலர் ரத்ததானம் செய்தனர். காரங்காடு வட்டார மேய்ப்புப்பணி பேரவை பொருளாளர் ஜஸ்டின் தாஸ் நன்றி கூறினார்.
காரங்காடு ஆலய பங்குப்பேரவை துணைத்தலைவர் ஜெயசீலன், செயலாளர் மேரி ரெக்சலின், பொருளாளர் ஜெரின் பிரகாஷ், துணைச் செயலாளர் ஜோஸ்பின் ஷீபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.