ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் தலைவராக மாதங்கி மணிகண்டன் பதவியேற்று கொண்டார். இவருடன் சேர்ந்து மொத்தம் 9 நிர்வாகிகளும் பதவியேற்று கொண்டனர். புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கன்னியாகுமரி மாவட்ட கிளை, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாமும் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ சடையப்பர் பக்தர்கள் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகிகள் பொறுப்பேற்பு
