
சென்னை அடையார் முத்தமிழ் பேரவை அரங்கில் திராவிட வெற்றிக் கழகம் உதயமானது
இயக்கத்தின் பெயரை திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர் தொழிற்சங்கத் தலைவர் திருப்பூர் துரைசாமி பெயரை அறிவித்தார் உடன் பெயர் தேர்வுக் குழு தலைவர் புலவர் செவந்தியப்பன், செங்குட்டுவன், வழக்கறிஞர் அழகு சுந்தரம் உள்ளிட்டோர் மற்றும் நாஞ்சில் சம்பத், அப்துல்காதர், மூத்த ஊடக வியலாளர்கள் அய்யநாதன், ராஜகம்பீரன், உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சர்தார் ஜீவன் சிங்,
கர்நாடகா மாநிலத்தில் இருந்து திராவிட நகர கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அபி கன்னடா நாடு, கேரளா மாநிலம் கண்ணூர் வேதாந் தீபக் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தி உரையாற்றினார்கள்.

திருப்பூர் துரைசாமி, விருதுநகர் சண்முகசுந்தரம், சிவகங்கை புலவர் செவந்தியப்பன், செங்குட்டுவன் உள்ளிட்ட நான்கு பேரும் எழுதிய 10 கடிதங்கள் தொகுக்கப்பட்டு நாஞ்சில் சம்பத், வழக்கறிஞர் அழகு சுந்தரம் இருவரின் அணிந்துரையில் அழகிய நூலாக வடிவம் பெற்று
நாங்கள் குற்றம் சாட்டுகின்றோம்
யார் துரோகி என்ற நூல் வெளியிடப்பட்டது.
திராவிட வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராக
மல்லை சி ஏ சத்யா,
இணை ஒருங்கிணைப்பாளர் மாஸ்டர் கராத்தே பழனிச்சாமி,
முதன்மைச் செயலாளர் வல்லம் பஷீர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் வழக்கறிஞர் சேலம் ஆனந்தராஜ்
அரசு பிரபாகரன்,
பாண்டியராஜன், கோவை ஆனந்த், வாசுகி, பெரியார் தாசன் ,
மாநிலச் செயலாளர்கள் ஊனை பார்த்திபன், கோடை திரவியம், அரியலூர் மாணிக்க வாசு, பாலசுப்பிரமணியன்,
சங்கரன் கோவில் ஆறுமுகசாமி ஆகியோர் தலைமைக் கழக நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டனர் தொடர்ச்சியாக அணிகளின் செயலாளர்கள் அறிவிக்கப்பட உள்ளனர் அடுத்த கட்டமாக மாவட்டங்கள் தோறும் சுற்றுப் பயணம் செய்து திராவிட வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை வலுப்படுத்தும் செயல்திட்டம் நடைமுறை படுத்தப் பட இருக்கிறது. தென் சென்னை மாவட்ட செயலாளர் செல்வபாண்டியன் மற்றும் மத்திய சென்னை இளவழகன், வடசென்னை ஞானம் காஞ்சி வளையாபதி, திருவள்ளுர் கெளரி குமார், தாம்பரம் மாநகரம் ராஜா முகமது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பொள்ளாச்சி விக்னேஷ் மாஸ்டர் ஜனார்த்தனன் நன்றி கூறிய செயல் மூர்த்தி மற்றும் கருத்துரை ஆற்றிய வாகை முத்தழகன், அனல் கண்ணன், சுகன், வழக்கறிஞர் தினேஷ், ஜமுனா உள்ளிட்ட அனைவருக்கும்
திராவிட வெற்றிக் கழகம் தலைமை ஒருங்கிணைப்பாளர் மல்லை சத்யா வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
