சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கல்

Share others

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலத்திற்கு முன்பாக மாநில அளவில் முதலாவதாக 100 சதவீதம் சிறப்பு தீவிர திருத்தம் பணியினை முடித்தமைக்காக சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நற்சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.

/
இந்திய தேர்தல் ஆணையம் நிர்ணயித்த காலத்திற்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 100 சதவீதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியினை மாநில அளவில் முதலாவதாக முடித்தமைக்காக, சிறப்பாக பணியாற்றிய உதவி தேர்தல் அலுவலர், கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் உள்ளிட்டவர்களை பாராட்டும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் ஈடுப்பட்ட அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் படி, 4.11.2025 முதல் தமிழ்நாடு முழுவதும் சிறப்பு தீவிர திருத்த கணக்கீட்டு படிவம் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுதோறும் சென்று கணக்கீட்டு படிவம் வழங்கி, திரும்ப பெற்று மின்னணுமயமாக்கம் பணிகள் துரிதமாக நடைபெற்றது.


அதன் அடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் 3,02,250, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2,71,185, குளச்சல் சட்டமன்ற தொகுதியில் 2,76,754, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் 2,45,824, விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 2,42,756, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியில் 2,54,103 என 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கீட்டு படிவங்கள் வழங்கியும், பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று, மின்னணுமயமாக்கும் பணி 100 சதவீதம் நிறைவடைந்துள்ளது.


வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் சிறப்பாக பணியாற்றிய உதவி தேர்தல் அலுவலர் (விளவங்கோடு மற்றும் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கோதை, மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலர்கள் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் குருசந்திரன்

(கன்னியாகுமரி, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி), ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னான்டோ (குளச்சல் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி), கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும்

மாவட்ட வழங்கல் அலுவலர் புஷ்பா தேவி, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, குளச்சல் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மோகனா, பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்

மற்றும் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் ராஜன், கிள்ளியூர்; சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி ஆணையர் கலால் ஈஸ்வர நாதன், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி இயக்குநர்கள் (பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகள்), நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆகியோர்கள் ஆற்றிய களப்பணி அளப்பறியது. அவர்கள்

தன்னலமின்றி, தங்களுக்கு வழங்கிய பணிகளை முழு ஈடுப்பாட்டுடன் அல்லும் பகலும் அயராது பணியாற்றி, மாவட்டத்தில் கணக்கீட்டு படிவங்களை வழங்கியும், பூர்த்தி செய்த படிவங்களை திரும்ப பெற்று, அவற்றினை மின்னணுமயமாக்கும் பணிகளில் மிகச்சிறப்பாக பணியாற்றி 100 சதவீதம் கணக்கீட்டு படிவங்கள் மின்னணுமயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் நமது மாவட்டம் மாநிலத்தில் முதலாவது இடம் பிடிக்க உதவிய, இந்த பணிகளில் ஈடுப்பட்ட அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்தார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *