சவால்களில் வழிகாட்டும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சி
இன்றைய காலகட்டத்தில் சவால்களால் உளஅழுத்தத்தோடும்,உளப்பதற்றத்தோடும்,உளச்சோர்வோடும் அவதிப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. இந்த சவால்களை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் விதத்தில் இந்த பயிற்சி வடிவமைக்கப்பட்டு உள்ளது.
உளநல முறைகளில் பயிற்சி பெற்றவர்கள், ஆற்றுப்படுத்துதல் அணுகுமுறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள், வழிகாட்டுதலில் அனுபவம் பெற்றவர்களை கொண்டு ஹோலி கிராஸ் கல்லூரியும், திருப்புமுனை போதை நோய் நலப்பணியும் இணைந்து நடத்தும் 20 வார தொடர் வகுப்புகளைக் கொண்டது இந்த பயிற்சி.
100 மணி நேர பட்டய பயிற்சியானது டிசம்பர் 20ஆம் தேதி துவங்குகின்றது.
இது குறித்த ஒரு முழுமையான செய்தியாளர் சந்திப்பு நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் ரோடு சாலையில் உள்ள திருப்புமுனை போதை நோய் நலப்பணி மையத்தில் வைத்து திருப்புமுனை இயக்குனர் அருள் முனைவர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் விரிவாக எடுத்து கூறினார்.
பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வுக்கான ஏற்பாடுகளை திருப்புமுனை செய்தித் தொடர்பாளர் டாக்டர் அருள் குமரேசன் மற்றும் பொறுப்பாளர்கள் செய்து இருந்தனர். ஆனி ஜெசிலா, அருட்சகோதரிகள் பேசில் ரோஸ், மேரி ஜான்சி, பிலோமினாள், ராபர்ட், சந்திரா, கவுரி ராஜா, ஆன்டனி டெலி, வினோ, பிதலிஸ் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
சவால்களில் வழிகாட்டும் உளநலமுறைகள் பட்டயப் பயிற்சி குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு
