அஞ்சலகங்களின் இணைப்பு

Share others

அஞ்சலகங்களின் இணைப்பு தொடர்பாக கன்னியாகுமரி கோட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் கூறி உள்ளதாவது :
அஞ்சல் சேவைகளை மேம்படுத்தும் பொருட்டு கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் வடசேரி மற்றும் நாகர்கோவில் பஜார் அஞ்சல் அலுவலகங்கள் 0.5 கி. மீ மற்றும் 1 கி. மீ தொலைவில் உள்ள நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தோடு இணைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் நாகர்கோவில் தலைமை அஞ்சலகத்தில் விரைவு மற்றும் பார்சல் தபால் சேவையானது 24 மணி நேரமும் செயல்படும் என்பதும் தெரிவிக்கபடுகிறது. வடிவீஸ்வரம் அஞ்சல் நிலையமானது 0.5 கி. மீ தொலைவில் உள்ள நாகர்கோவில் டவுண் அஞ்சலகத்தோடு இணைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று மேட்டுகடை அஞ்சலகம் தக்கலை தலைமை அஞ்சலகத்தோடும் குழித்துறை மேற்கு அஞ்சலகம் குழித்துறை அஞ்சல் அலுவலகத்தோடும் மார்த்தாண்டம் பிரிட்ஜ் அஞ்சலகம் மார்த்தாண்டம் அஞ்சலகத்தோடும் இணைக்கப்பட்டு உள்ளன. தக்கலை தலைமை அஞ்சலகம் மற்றும் மார்த்தாண்டம் அஞ்சலகத்தில் விரைவு மற்றும் பார்சல் தபால் சேவைகள் இரவு 8 மணி வரை செயல்படும். ஆகையால் இந்த குறிப்பிட்ட அஞ்சலக வாடிக்கையாளர்கள் தத்தம் அலுவலகங்கள் இணைக்கப்பட்டு உள்ள அஞ்சலகங்களை இனி வரும் நாட்களில் தங்களுடைய அஞ்சல் சேவைகளுக்கு உபயோகப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *