கன்னியாகுமரி மாவட்ட நாடார் மகாஜன சங்கம் சார்பில் நாடார் சமுதாய கல்வி வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம் திங்கள் நகரில் உள்ள உள்ள நாஞ்சில் மஹாலில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட நாடார் மகாஜன சங்க செயலாளர் முருகன் தலைமையில் குருந்தன்கோடு ஒன்றிய செயலாளர் மணிகண்டன், திங்கள் நகர் செயலாளர் ஜெயசந்திரன் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஐசக் சாம்ராஜ் வரவேற்றார். நாடார் மகாஜன சங்கம் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். இதில் நிர்வாகிகள் உட்பட பலர் பேசினார்கள். மாவட்ட துணை செயலாளர் ஜார்ஜ் ஜஸ்டின் நன்றி கூறினார்.
நாடார் மகாஜன சங்கம் சார்பில் நாடார் சமுதாய கல்வி வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முன்னேற்றம் குறித்து ஆலோசனை கூட்டம்
