26 ம் தேதி கிராம சபைக் கூட்டம்

Share others

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம
ஊராட்சிகளிலும் குடியரசு தினமான 26.1.2026 அன்று
கிராமசபைக் கூட்டம் -மாவட்ட ஆட்சியாளர் அழகு மீனா தகவல்.
குடியரசு தினமான 26.1.2026 அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும்
கிராம சபைக் கூட்டத்தினை ஊராட்சிகளின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி
முறையில் காலை 11 மணி அளவில் நடத்திடவும் அரசாணையில்
குறிப்பிட்டு உள்ளவாறு உறுப்பினர்களின் வருகை இருப்பதை உறுதி செய்து கிராம
சபைக் கூட்டம் நடத்திடவும் தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எனவே கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஊராட்சி
ஒன்றியங்களுக்கு உட்பட்ட 95 கிராம ஊராட்சிகளிலும் 26.1.2026 காலை 11
மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சிகளில் அனைத்து துறைகளிலும்
மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட உள்ளது.
அரசால் பல்வேறு துறைகளின் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள்
குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொது மக்களுக்குத் தேவையான
விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும் இந்த கிராம
சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெற உள்ள
கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து
பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறது.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *