கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் சார்பில், நான் முதல்வன், மாவட்ட திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் ஆகியவற்றுடன் இணைந்து நடத்தும் (மாவட்ட ஆட்சியரின் வேலைவாய்ப்பு இயக்கம்) கீழ் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாம் 7.3.2026 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும்.
இந்த வேலைவாய்ப்பு முகாம் டிபி சோலார் ( டாடா பவர் சோலார்)– திருநெல்வேலி நிறுவனம் மூலம் மொத்தம் 200 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இது பெண்களுக்காக மட்டும் மேற்கொள்ளப்படும் வேலைவாய்ப்பு முகாம்.
இதில், பயிற்சி பயிற்சியாளர்கள் மற்றும் நிறுவன பயிற்சியாளர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, ஐடிஐ / டிப்ளமோ / பி.இ./ பிஎஸ்சி/ படிப்பை முடித்த பெண்கள் விண்ணப்பிக்கலாம். அப்ரண்டீஸ் காலத்தில் ரூ.13,000 முதல் ரூ.16,500 வரை வழங்கப்படும்.
ஆர்வம் உள்ள பெண்கள் கீழ்க்கண்ட இணைப்பின் மூலம் முன்பதிவு செய்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம்: https://bit.ly/3OSbSGo மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள: 8072007360. இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார
கன்னியாகுமரி மாவட்டத்தில் 7 ம் தேதி பெண்களுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்
