வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகள்

Share others

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதி வாக்குச்சாவடி மையங்களிலும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது -மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களை ஆய்வு மேற்கொண்டு தெரிவித்தார்.


கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவட்டார் அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-


நடைபெற உள்ள தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, வாக்காளர்கள் எவ்வித சிரமமுமின்றி தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும் என்பதை உறுதிப்படுத்த, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் குறிப்பிட்ட சில குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் இருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
அதனடிப்படையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 229, கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 230, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி 231, குளச்சல் சட்டமன்ற தொகுதி, 232, பத்மனாபபுரம் சட்டமன்ற தொகுதி, 233, விளவங்கோடு சட்டமன்ற தொகுதி 234, கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தடையின்றி வாக்குச்சாவடிக்குள் சென்று வர ஏதுவாக, தரமான சாய்வுதளங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வாக்காளர்கள் வரிசையில் நிற்கும்போது வெப்பத்தின் தாக்கம் தெரியாமல் இருக்க நிழற்குடைகளும், போதிய குடிநீர் வசதிகளும் மேற்கொள்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு அறைகளில் போதிய வெளிச்சம் இருப்பதை உறுதி செய்ய கூடுதல் மின்விளக்குகள் மற்றும் தடையில்லா மின்சார வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பள்ளி மற்றும் பொதுக்கட்டடங்களில் அமைந்து உள்ள வாக்குச்சாவடி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, கழிப்பறை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அதன்ஒருபகுதியாக பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருவட்டார் அரசு தொடக்கப்பள்ளி, வேர்கிளம்பி முதலார் அரசு நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையங்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளபடவேண்டிய அடிப்படை வசதிகள் குறித்து துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வில் பத்மநாப புரம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் திருவட்டார் வட்டாட்சியர் மரகதவல்லி, தலைமையாசிரியகள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
தேர்தல் திருவிழா தமிழ்நாட்டின் பெருவிழா


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *