அஞ்சல் முகவர்களுக்கான போட்டி

Share others

பொதுமக்கள் இடையே சிறுசேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், கன்னியாகுமரி அஞ்சல் முகவர்களுக்கான சிறப்பு போட்டி
(கன்னியாகுமரி அஞ்சல் கோட்டம் அறிவிப்பு)
இந்திய அஞ்சல் துறையின் கன்னியாகுமரி கோட்டம், சிறுசேமிப்புத் திட்டங்களில் புதிய கணக்குகள் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் "MPKBY/SAS AGENT CENTURY CONTEST" என்ற சிறப்பு போட்டியை ஜூலை 1 முதல் ஜூலை 15, 2026 வரை நடத்துகிறது.
இந்த போட்டியில், ஒவ்வொரு MPKBY/SAS முகவரும் 100 புதிய கணக்குகளை (RD, TD மற்றும் MIS திட்டங்களில்) தொடங்கும் இலக்குடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.100 புதிய கணக்குகளைத் தொடங்கும் அனைத்து முகவர்களுக்கும் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும், அதிக எண்ணிக்கையிலான புதிய கணக்குகளைத் தொடங்கி முன்னிலை வகிக்கும் முதல் மூன்று MPKBY/SAS முகவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளன.
இந்த போட்டி மூலம் பொதுமக்களிடம் அஞ்சல் துறையின் சிறுசேமிப்புத் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பதுடன், முகவர்களின் பங்களிப்பை கவுரவிப்பதே நோக்கமாகும்.
இதுகுறித்து, கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், அனைத்து தலைமை மற்றும் துணை அஞ்சலக அலுவலர்களும் தங்களது கட்டுப்பாட்டில் உள்ள முகவர்களை முழுமையாக ஊக்குவித்து, போட்டியை வெற்றிகரமாக நடத்திட ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொண்டு உள்ளார். மேலும், பொதுமக்கள் அஞ்சல் சேமிப்புத் திட்டங்களில் அதிகளவில் இணைந்து பயன்பெறுமாறும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *