தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்கம், கன்னியாகுமரி மாவட்டம் சார்பில் நடந்த
முப்பெரும் விழாவில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்
நினைவு பரிசு வழங்கி, கவுரவித்தார்.
கன்னியாகுமரி மாவட்ட தமிழ்நாடு வருவாய்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10-ம்
வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வருவாய்துறை அலுவலர்களின்
குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி. மனமகிழ் மன்றம் 12-ம் ஆண்டு விழா மற்றும்
தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க விழா உள்ளிட்ட முப்பெரும் விழா நிகழ்ச்சியானது.
நாகர்கோவில் செட்டிகுளம் கிருஷ்ணா அரங்கில் நடந்தது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்து
கொண்டு. வருவாய் துறை அலுவலர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி பேசுகையில்,
தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள்
உள்ளிட்ட பகுதிகளிலும் வருவாய் துறையின் பங்கு மிக முக்கியமானது. இந்த முப்பெரும்
விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்ற வருவாய்துறை
அலுவலர்களின் குழந்தைகளுக்கு நினைவு பரிவு மற்றும் காசோலை வழங்குவதில்
பெருமகிழ்ச்சி அடைகிறேன். இதுபோன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை மேன்மேலும் நீங்கள்
முன்னெடுத்து செல்ல வேண்டும். வருவாய்துறை அலுவலர் சங்கம் முன்வைத்த அனைத்து
கோரிக்கைகளும் பரிசீலிக்கப்படும் என இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம்,
பத்மநாபபுரம் சார் ஆட்சியர் கௌசிக், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர்
சேதுராமலிங்கம். மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினர்
நல அலுவலர் சுப்பையா, மாவட்ட வழங்கல் அலுவலர்
விமலா ராணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) புகாரி.
மாவட்ட மேலாளர் (டாஸ்மாக்) சங்கரலிங்கம். தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்
சங்கம் கன்னியாகுமரி மாவட்ட தலைவர் ஆனந்த் சதீஷ், மாவட்ட செயலாளர்
சுரேஷ் பாபு, பொருளாளர் மணிகண்டன். முன்னாள் மாவட்ட தலைவர்
கோலப்பன், செயலாளர் சுப்பிரமணியன். மூத்த உறுப்பினர் பத்மகுமார்,
துணைத்தலைவர் சக்திகலா உட்பட பலர் கலந்து கொண்டார்கள். நிகழ்ச்சியினை
வருவாய் அலுவலர்கள் மணிகண்டன். ஐரின் செல்வி ஆகியோர் தொகுத்து
வழங்கினார்கள்.