கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பாக பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
10, 11 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படும் அலகுத்தேர்வினால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஏற்படும் சிரமங்கள் பற்றி மிகத் தெளிவாக முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களிடம் டிஎன்ஹெச்எஸ்பிஜிடிஏ வின் மாவட்டச் செயலாளர் சாமுவேல் எடுத்துரைத்தார்.
தலைமையாசிரியர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்து தலைமையாசிரியர் சங்கத் தலைவர் மரிய பாக்யசீலன் எடுத்துரைத்தார்.
ஈராசிரியர்கள் பள்ளிகளில் ஏற்படும் பாதிப்புகள், இஎம்ஐஎஸ் சார்ந்த பிரச்சினைகள் பற்றி கூட்டமைப்பின் செயலாளர் ஜாண் கிறிஸ்டோபர் எடுத்துரைத்தார்.
தொடக்கப்பள்ளி சார்ந்த பாதிப்புக்களை தமிழக ஆசிரியர் கூட்டணியின் தலைவர் சுரேஷ்குமார் எடுத்துரைத்தார்.
மேலும் காலை மற்றும் மாலை நேர வகுப்புகளினால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும்,
பின்தங்கிய மாணவர்களை அச்சிவர்ஸ் என்ற பெயரில் தனி வகுப்பறைகளில் பிரித்து வைத்து தனிமைப்படுத்துவதினால் மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த பிரச்சினைகள் பற்றியும்,
அலகுத் தேர்வுகள், மற்றும் காலை மாலை வகுப்புகள் நடத்த அரசின் வழிகாட்டுதலின் படி செயல்முறைகள் வெளியிட வேண்டியும் மேலும் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து பேசப்பட்டது.
கோரிக்கைகள் சிஇஓ பரிசீலிக்கப்படவில்லை என்றால் விரைவில் போராட்டம் .