தேசிய ஊட்டச்சத்து மாத விழா

Share others

கன்னியாகுமரி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின்
சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்க
நிகழ்ச்சியானது நடந்தது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் கலந்து கொண்டு, ஊட்டச்சத்து
கண்காட்சி அரங்கினை திறந்து வைத்து, தெரிவிக்கையில் –
ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்வானது
கொண்டாடப்பட்டு வருகிறது.

அதனைத்தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் சார்பில் இந்த வருடம் (2023)
தேசிய ஊட்டச்சத்து மாத நிகழ்வானது ஊட்டச்சத்தான இந்தியா, கல்வி நிறைந்த இந்தியா
மற்றும் வலுவான இந்தியா என்ற கருத்தின்கீழ் கொண்டாடப்பட உள்ளது. மேலும்
இந்த நாட்களில் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து ஏற்படுத்தும் வகையில் ஊட்டசத்து குறித்து
கண்காட்சி அமைத்து பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு தாய் மற்றும்
குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல் நிலையை அடைவது
ஊட்டசத்து மற்றும் ஆரோக்கியமான கருத்துக்களை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று
எடுத்து கூறுவது, சத்தான உணவு, தூய்மையான குடிநீர், சுகாதாரம், சரியான தூய்மை,
பச்சிளம் மற்றும் சிறு குழந்தைகளுக்கான உணவு மற்றும் பழக்க வழக்கங்களை எடுத்து கூற
துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் மாவட்டத்திற்கு உட்பட்ட ஒவ்வொரு
வீடுகள் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிளிலும் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி
அனைத்து தரப்பட்ட பொதுமக்கள், குழந்தைகள் உள்ளிட்டோர்
சிறந்த
திறமையானவர்களாகவும்
ஆரோக்கியமானவர்களாகவும்,
உருவெடுப்பதற்கு நாம்
அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்த கையெழுத்து இயக்கத்தினை துவக்கி வைத்ததோடு.
ஊட்டசத்து குறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும்
பணியாளர்களால் உருவாக்கப்பட்ட ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு கோல
கண்காணட்சியினை பார்வையிட்டார்கள்.
நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மாவட்ட வருவாய் அலுவலர் .பாலசுப்பிரமணியம்,
உதவி ஆட்சியர் (பயிற்சி) .ராஜட் பீட்டன், , ஒருங்கிணைந்த குழந்தைகள்
வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, உதவி வன அலுவலர் (பயிற்சி)
வித்யா தார், உசூர் மேலாளர் ஜூலியன் ஹூவர் உட்பட பலர் கலந்து
கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *