கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில்
சுமார் ரூ.18.57 கோடி மதிப்பில் வளர்ச்சித்திட்ட பணிகளை
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்
துவக்கி வைத்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மிடாலம், பாலூர், திப்பிறமலை,
மத்திக்கோடு மற்றும் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அடைக்காகுழி, குளப்புறம், சூழால்,
நடைக்காவு, மங்காடு, மெதுகும்பல், வாவறை, முஞ்சிறை, பைங்குளம் ஆகிய ஊராட்சிகள் மற்றும் கிள்ளியூர்,
பாலப்பள்ளம், கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சாலை மேம்பாட்டு பணிகளை
பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் , கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர்
ராஜேஷ் குமார் முன்னிலையில் துவக்கி வைத்து,
தெரிவிக்கையில்:-
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு
தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில்
பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
அதனடிப்படையில் முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ்
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றியம், மிடாலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1.17
கோடி மதிப்பில் சாலை பணிகளையும், பாலூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.97.5 லட்சம் மதிப்பில்
சாலை பணிகளையும், திப்பிறமலை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பில் சாலை
பணிகளையும், மத்திக்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.1 கோடி மதிப்பில் சாலை பணிகளையும்
துவக்கி வைக்கப்பட்டு உள்ளது.
அதனைத்தொடர்ந்து முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம்,
அடைக்காக்குழி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.79 லட்சம் மதிப்பில் சாலை பணிகளையும், குளப்புறம்
ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.47 லட்சம் மதிப்பில் சாலை பணிகளையும், சூழால் ஊராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் ரூ.75 லட்சம் மதிப்பில் சாலை பணிகளையும், நடைக்காவு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்
ரூ.56 லட்சம் மதிப்பில் சாலை பணிகளையும், மங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.64 லட்சம்
மதிப்பில் சாலை பணிகளையும், மெதுகும்பல் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.85 லட்சம் மதிப்பில்
சாலை பணிகளையும், வாவறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.48 லட்சம் மதிப்பில் சாலை
பணிகளையும், முஞ்சிறை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.30 லட்சம் மதிப்பில் சாலை பணிகளையும்,
பைங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.49 லட்சம் மதிப்பில் சாலை பணிகளும் துவக்கி
வைக்கப்பட்டு உள்ளது.
மேலும் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் ரூ.2.33 கோடி மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளும், கருங்கல் பேரூராட்சிக்கு உட்பட்ட
பகுதிகளில் ரூ.87 லட்சம் மதிப்பில் சாலை பணிகளும், கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.34
லட்சம் மதிப்பில் சாலைப்பணிகளும்,
மாநில நிதி ஆணையத்திட்டம் 2023-2024 ன்கீழ் கிள்ளியூர்
பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.2.4 கோடி மதிப்பில் சாலைப்பணிகளும், பாலப்பள்ளம்
பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.97 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாட்டு பணிகளும், கருங்கல்
பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.94 லட்சம் மதிப்பில் சாலை பணிகளும், நகர்ப்புற மேம்பாட்டு
திட்டத்தின்கீழ் ரூ.60 லட்சம் மதிப்பில் சாலைப்பணிகளும், தமிழ்நாடு நகர்ப்புற சாலை உள்கட்டமைப்பு
திட்டத்தின்கீழ் ரூ.1.27 கோடி மதிப்பில் சாலைப்பணிகளும் என மொத்தம் சுமார் ரூ.18.57 கோடி மதிப்பில்
சாலைப்பணிகளும் துவக்கி வைக்கப்பட்டு உள்ளது. இப்பணிகள் அனைத்தையும் விரைந்து முடித்து
பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இவ்வாறு பால்வளத்துறை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளில் இந்து அறநிலையத்துறை மாவட்ட தலைவர் ராஜன், வட்டார
வளர்ச்சி அலுவலர்கள், பேரூராட்சி தலைவர்கள், ஊராட்சி மன்றத்தலைவர்கள், பேரூராட்சி மற்றும் ஊராட்சி
பொறியாளர்கள், செயல் அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.