கலைஞர் மகளிர் உரிமைத் தொகை எத்தனை பேருக்கு கிடைக்க போகிறது

Share others

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அண்ணா பிறந்த நாளான 15-9-2023 அன்று தொடங்கப்படுவதையொட்டி காணொலிக் காட்சி வாயிலாக தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இந்த கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை.கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் தொடக்க விழாவானது வருகிற 15 ம் நாள் காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினமே அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற இருக்கிறது. தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் ஆயிரம் ரூபாயை மாதாமாதம் ஆண்டுதோறும் பெறப் போகிறார்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடு தேவைப்படும் திட்டமாகவும் அதிகப்படியான பயனாளிகள் உள்ளடக்கிய திட்டமாகவும் இது அமைந்துள்ளது. தகுதி வாய்ந்த பெண்களுக்கு உரிமைத் தொகை அவர்களது வங்கி கணக்கில் வரும் செப்டம்பர் 15 முதல் கிடைக்கும் வகையில் நாம் ஏற்பாடு செய்துள்ளோம். இத்தகைய தகுதி பெற்ற குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் தோறும் வங்கிகளில் அவர்களது கணக்கில் உரிமைத் தொகை வரவு வைக்கப்படும். ஏடிஎம் கார்டுகள் முதற்கட்டமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் படிப்படியாக விரைவில் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் ஆனால் ஏடிஎம் கார்டு வழங்கப்படுவதற்காக காத்திருக்காமல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக் கூடாது அதிலும் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் வரும் 15ஆம் தேதி என்னுடைய சார்பில் மகளிருக்கு அனுப்பி வைக்கப்படும். குறுஞ்செய்தியில் பணம் எடுப்பது தொடர்பாக ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அது குறித்து தகவல் தெரிவிக்க வேண்டிய டோல் ப்ரீ எண்ணும் சேர்க்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் அரசுக்கு வந்துள்ளன. தகுதி உள்ளவர்கள் என நாம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேர். அப்படியானால் மற்றவர்களது கோரிக்கை ஏன் ஏற்கப்படவில்லை என்பதை நாம் அவர்களுக்கு சொல்லியாக வேண்டும். எந்த அடிப்படையில் உங்களது கோரிக்கை எங்களால் ஏற்க முடியவில்லை என்பதற்கான காரணத்தை குறிப்பிட்டு அவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பியாக வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *