அஞ்சலகங்களில் தங்கப் பத்பத்திரம் விற்பனை

Share others

அஞ்சலகங்களில் தங்கப் பத்திர விற்பனை

  இந்திய அரசு தங்கப்பத்திரத் திட்டத்தை ரிசர்வ் வங்கி மூலமாக வெளியிடுகிறது .தங்கப் பத்திர விற்பனை    செப்டம்பர் 11ம் தேதி முதல் 15ம்  தேதி வரை நடைபெற உள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .5,923 ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் தக்கலை தலைமை அஞ்சலகங்களிலும் மற்றும் அனைத்து துணை அஞ்சலகங்களிலும் இந்த ஐந்து நாட்களும் தங்கப்பத்திர விற்பனை நடைபெறும். 

தங்கம் பத்திர வடிவில் இருப்பதால், பாதுகாப்பாக இருக்கும். தனி நபர் ஒரு நிதியாண்டிற்கு குறைந்தபட்சம் ஒரு கிராம் முதல் அதிகபட்சம் நான்கு கிலோ வரை வாங்கலாம் .மேலும் முதலீட்டுத் தொகைக்கு 2.50 சதவீதம் வட்டியும், 8 ஆண்டுகள் கழித்து முதிர்வடையும் நாளில் அன்றுள்ள விலைக்கு நிகரான பணமும் கிடைக்கும் . தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு இது மிகச்சிறந்த வாய்ப்பு ஆகும்.

 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு, பான் கார்டு கட்டாயம் தேவை, அதனுடன், ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது பாஸ்போர்ட் இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல், தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க நகல் ஆகியவற்றைக் கொண்டு , தங்கப் பத்திரத்தை அனைத்து அஞ்சலகங்களிலும் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவலுக்கு,04652-232032, 04652-232066, 04651-250740, 9894774410, 9080820107 என்ற எண்களைத் தொடர்புகொள்ளவும். இத்தகவலை கன்னியாகுமரி முதுநிலை கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர்  செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.

Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *