
கன்னியாகுமரி மாவட்டத்தில் 22-9-2023 அன்றைய நிலவரப்படி அணைகளின் நீர்மட்டம் சிற்றாறு ஒன்று 11.35 அடியாகவும், சிற்றாறு இரண்டு 11.44 அடியாகவும், பேச்சிப்பாறை 19.40 அடியாகவும், பெருஞ்சாணி 39.10 அடியாகவும், பொய்கை 9.50 அடியாகவும், மாம்பழத்துறையாறு 3.28 அடியாகவும், முக்கடல் அணை – 13.50 அடியாகவும் இருந்தது. பேச்சிப்பாறை அணைக்கு 984 கன அடி தண்ணீர் உள்வரவாகவும், 583 கன அடி தண்ணீர் வெளி வரவாகவும் இருந்தது. பெருஞ்சாணி அணைக்கு 561 கன அடி உள் வரவாகவும், 200 கன அடி தண்ணீர் வெளி வரவாகவும் இருந்தது. முக்கடல் அணையில் 9.8 கன அடி தண்ணீர் உள் வரவாகவும், 8.6 கன அடி தண்ணீர் வெளி வரவாகவும் இருந்தது.