கன்னியாகுமரி மாவட்டம் அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப விழா மே மாதம் 23 ம் தேதி துவங்கி ஜூன் மாதம் 1 ம் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. விழாவின் முதல் நாள் மாலையில் கொடிப்பவனியும், ஜெபமாலை, புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் பேரருட்பணி ஜெயக்குமார் தலைமையில் முளகுமூடு வட்டார முதல்வர் பேரருட்பணி டேவிட் மைக்கல் மறையுரையோடு நடந்தது. இரவில் கலை களஞ்சியம் பல்சுவை நிகழ்வுகள் நடந்தது. விழா நாட்களில் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் இரவில் கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. 3 ம் நாள் விழாவில் காலையில் ஆங்கில திருப்பலி வட இந்தியா அருட்பணி ஜினோ ஜோனிஸ் மறையுரையோடு நடந்தது. 5 ம் நாள் விழாவான 27 ம் தேதி மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ்தாஸ் தலைமையில் நடந்தது. 7 ம் நாள் விழாவில் இரவில் அன்பு விருந்து நடந்தது. 8 ம் நாள் விழாவில் காலையில் திருமுழுக்கு திருப்பலி நடந்தது. 9 ம் நாள் விழாவில் காலையில் செபமாலை, புகழ்மாலை, முதல் திருவிருந்து திருப்பலி புலியூர்குறிச்சி பேரருட்பணி இயேசு ரெத்தினம் தலைமையில் அருட்பணி ரபேல் மறையுரையோடு நடந்தது. மாலையில் செபமாலை, புகழ்மாலை, மாலை ஆராதனை கோட்டாறு வட்டார முதல்வர் பேரருட்பணி சகாய ஆனந்த் தலைமையில் புல்லாணி அருட்பணி பெர்டின் அனஸ் மறையுரையோடு நடந்தது. இரவில் தேர்ப்பவனி நடந்தது. 10 ம் நாள் விழாவான ஜூன் 1 ம் தேதி காலை 9 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை,9.30 மணிக்கு திருவிழா திருப்பலி மறை மாவட்ட குருகுல முதல்வர் பேரருட் பணி சேவியர் பெனடிக்ட் தலைமையில் அருட்பணி கில்பர்ட் லிங்சன் மறைவுரையோடு நடந்தது. மதியம் 3 மணிக்கு தேர்ப்பவனி , மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், இரவு 7 மணிக்கு மறைக்கல்வி மன்ற கலை நிகழ்ச்சிகள், இரவு 8.30 மணிக்கு காப்புக்காடு சிற்பி தியேட்டர்ஸ் வழங்கும் புனித அந்தோணியார் நாடகம் நடந்தது. விழா ஏற்பாடுகளை பங்கு இறைமக்கள், பங்கு மேய்ப்பு பணி பேரவை , அருட் சகோதரி ஜாய் ஆலிஸ், பங்குத்தந்தை அருட்தந்தை ததேயுஸ், பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர் மரிய ஆன்றனி, செயலாளர் மேரி சுஜி, துணை செயலாளர் லீமாறோஸ், பொருளாளர் மரிய செபஸ்தியான் ஆகியோர் இணைந்து செய்து இருந்தனர்.
அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில் தேர்பவனி கோலாகலம்
