கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
ஆசாரிப்பள்ளத்தில் வைத்து அரசு மருத்துவக் கல்லூரி மற்றும்
இந்திய மருத்துவ சங்கம் ஆசாரிப்பள்ளம் கிளையும்
இணைந்து ரத்த தான முகாம்
நடந்தது. இதில் மருத்துவர்கள் மற்றும்
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் ரத்த தானம் செய்தனர்
ரத்த தான முகாமை மருத்துவக் கல்லூரி முதல்வர்
ராமலெட்சுமி தொடங்கி
வைத்தார். இதில் துணை முதல்வர் சுரேஷ்பாலன்,
மருத்துவ கண்காணிப்பாளர் கிங்ஸ்லி ஜெயசிங்,
உறைவிட மருத்துவர் ஜோசப் சென்,
உதவி உறைவிடமருத்துவர்கள் விஜயலெட்சுமி,
ரெனிமோள்,
இந்திய மருத்துவ சங்க ஆசாரிப்பள்ளம் கிளை தலைவர்
முத்துகுமார் மற்றும் செயலாளர் அருள்
வெங்கடேஷ் மற்றும் அனைத்து துறை சார்ந்த
மருத்துன்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்த முகாமில் 220 யூனிட் ரத்தம்
சோகரிக்கப்பட்டது.
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் ரத்த தான முகாம்
