கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே குளுமைக்காடு, மாடத்தட்டுவிளை பகுதிகளில் செயல்பட்டு வரும் ஆட்லின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் நிறுவனர் முனைவர் ஆட்லின் பெஸ்டஸ் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவர் கல்வி பணியோடு ஒரு நல்ல திறமையான எழுத்தாளராகவும் செயல்பட்டார். அதுமட்டுமன்றி பல விருதுகளையும் பெற்றவர். இவர் குமரி குரல் பத்திரிகையில் சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து சிந்திக்க என்ற தலைப்பில் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை மையப்படுத்தி எழுதி வந்தார். இதன் மூலம் தனக்கென வாசகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தையும் பிடித்து உள்ளார். அன்னாரது இழப்பு ஈடுசெய்ய முடியாத அளவில் உள்ளது.
ஆட்லின் கல்வி குழுமத்தின் நிறுவனர் ஆட்லின் பெஸ்டஸ் காலமானார்
