கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு மற்றும் திருவட்டார் வட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணை I, சிற்றாறு அணை II ஆகிய அணைகளின் கொள்ளளவை விட நீர் அதிகமாகும் போது மேற்குறிப்பிட்ட அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்படும். எனவே தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளின் கரையோர பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்படுவதோடு, சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட அனைவரும் ஆற்றுப்படுகைளில் குளிப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.