இரு சக்கர வாகனத்தில் அதி வேகவேகம் காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

Share others

அதி பயங்கரமாக, பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வண்ணம் இருசக்கர வாகன சாகசம் செய்த மூன்று நபர்கள் கைது.சிறையில் அடைப்பு. இந்நடவடிக்கை தொடரும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்து உள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதி வேகமாகவும், பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவிட்டிருந்தார்.
இந்த நிலையில் பொதுமக்களின் உயிருக்கு ஊறுவிளைவிக்கும் வகையில்
இருசக்கர வாகனத்தில் சாகசத்தில் ஈடுபட்டு அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட கன்னியாகுமரி பூசப்பதட்டு பகுதியை சேர்ந்த ரஞ்சித், நல்லூர் பகுதியை சேர்ந்த ஆகாஷ் @ ஜெயராஜன், மற்றும் 17 வயது இளஞ்சிறார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். அதில் இருவர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். மேலும் இந்த மாதிரியான பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம், அதி பயங்கரமாக சாகசங்களில் ஈடுபடும் இளைஞர்களை கண்காணித்து, அவர்களின் மீது வழக்குபதிவு செய்து சிறையில் அடைக்கப்படுவர், மேலும் அவர்களின் ஓட்டுனர் உரிமை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *