தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைங்கிணக்க பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் திருக்கோயில் தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா இன்று (8.2.2025) வெளியிட்டு உள்ள பத்திரிக்கை செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில்-
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைங்கிணக்கவும், நிதி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சரின் தகவலின் படியும்
தோவாளை வட்டம், பூதப்பாண்டி கிராமம் அருள்மிகு ஸ்ரீ பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் திருக்கோயில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் 10 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு இந்த திருவிழாவானது 2.2.2025 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தைப்பூச நட்சத்திரத்தின் முந்தைய நாளான (9-ம் நாள் திருவிழா) 10.2.2025 (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்வினை முன்னிட்டு தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
10.2.2025 அன்று அறிவிக்கப்பட்டு உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2025 பிப்ரவரி திங்கள் நான்காவது சனிக்கிழமை (22.2.2025) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தோவாளை வட்டத்தில் இயங்கும் அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
மேற்கண்ட உள்ளூர் விடுமுறை தினமானது செலவாணி முறிச் சட்டம் 1881 இன் படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 10.2.2025 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என கன்னியாகுமரி மாவட்ட மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்து உள்ளார்.