தமிழக கடலோர பகுதிகளில் கடல் சீற்றம் மற்றும் கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும் என்பதால் தேசிய பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால் கடல் அலை 1.5 மீட்டர் உயரம் கொண்ட பேரலைகள் எழக்கூடும் என்பதால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடற்கரை சுற்றுலா தலங்களில் உள்ள கடலில் பொதுமக்கள் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியாளர் ஶ்ரீதர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.