கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து உள்ளதால், நாளை 15.10.2023 காலை 6 மணியளவில் சிற்றார் அணைகளில் இருந்து 500 கன அடி நீர் திறந்து விடப்பட உள்ளது. நீர் வரத்தினை பொறுத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஆறுகளில் நீர் வரத்து குறையும் வரை பொதுமக்கள் யாரும், ஆறுகளில் குளிக்கவோ, துணி துவைக்கவோ செல்ல வேண்டாம் எனவும், ஆறுகளின் கரைப்பக்கம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கேட்டுக் கொள்கிறார்.