
76-வது குடியரசு தினவிழா – மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தேசியக்கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அறிஞர் அண்ணா விளையாட்டு அரங்க மைதானத்தில் 76-வது குடியரசு தின விழா இன்று (26.01.2025) மிகச் சிறப்பாக நடந்தது. விழாவில் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், முன்னிலையில் தேசியக்கொடியினை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் சமாதானத்தை வலியுறுத்தும் வகையில் மூவர்ண பலூன்கள் மற்றும் வெண்புறாக்களை பறக்கவிட்டார்கள்.

/
அதனைத்தொடர்ந்து காவல்துறையை சார்ந்த 72 பேருக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் காவலர் பதக்கங்களையும், காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த 92 காவல்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்.
மேலும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுககு தலா ரூ.250 மானியம் கலைஞர் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.2075 மானியத்தில் விசைத்தெளிப்பான் ஒரு பயனாளிக்கும், தோட்டக்கலை மலைப்பயிர்கள் துறை சார்பில் பனை மேம்பாட்டு திட்டம் மூலம் பனை மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கு தலா ரூ.50,000 மானியம் 2 பயனாளிகளுக்கும், தமிழ்நாடு மாநில ஊரக நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மாவட்ட அளவிலான மணிமேகலை விருதுகள் 2022-2024 கீழ் சிறந்த ஊராட்சி அளவில் கூட்டமைப்புக்கான விருதினை ராஜாக்கமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட மேலகிருஷ்ணன்புதூர் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையையும், சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கான விருது கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட பாலூர் கிராம வறுமை ஒழிப்பு சங்கத்திற்கு ரூ.50,000-க்கான காசோலையினையும், சிறந்த சுய உதவிக்குழுக்கள் ஊரகத்திற்கான விருதினை பறக்கை ஊராட்சிக்கு உட்பட்ட கதம்பகம் மகளிர் சுய உதவிக்குழுக்கான விருது காட்டாத்துறை பருத்தி மகளிர் சுயஉதவிக்குழு, நட்டாலம் ஊராட்சிக்கு உட்பட்ட வெற்றி இலக்க மக்கள் மகளிர் சுயஉதவிக்குழு ஆகிய சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.25,000-க்கான காசோலையினையும், சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்புக்கான விருதினை பத்மநாபபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பத்மநாபபுரம் பகுதி அளவிலான கூட்டமைப்புக்கு ரூ.1 லட்சத்திற்கான காசோலையினையும், சிறந்த சுயஉதவிக்குழுக்கள் நகரத்திற்கான விருதினை அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மருங்கூர் அன்னை தெரசா மகளிர் சுயஉதவிக்குழு மற்றும் ராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நாகர்கோவில் செம்பருத்தி மகளிர் சுயஉதவிக்குழுக்கு தலா ரூ.25,000க்கான காசோலையினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்.
தொடர்ந்து தொழிலாளர் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.15.03 லட்சம் மதிப்பில் உதவித்தொகைக்கான காசோலையினையும், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பத்துறை சார்பில் சிறந்த விற்பனையாளர்களுக்கான முதல் பரிசு ரூ.4000க்கான காசோலையினை அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட இராமபுரம் நியாயவிலைக்கடைக்கும் இரண்டாம் பரிசு ரூ.3000 கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட ஆலன்விளை நியாயவிலைக்கடைக்கும், சிறந்த எடையாளர்களுக்கான முதல் பரிசு ரூ.3000க்கான காசோலையினை அகஸ்தீஸ்வரம் வட்டத்திற்கு உட்பட்ட ஒழுகினசேரி நியாயவிலைக்கடைக்கும், இரண்டாம் பரிசு ரூ.2000 கிள்ளியூர் வட்டத்திற்கு உட்பட்ட தூத்தூர் நியாயவிலைக்கடைக்கும், பேரூராட்சி துறையில் 20 ஆண்டுகள் விபத்துகளின்றி வாகனம் ஒட்டிய 5 வாகன ஒட்டுநர்க்கு தங்க பதக்கத்தினை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்.
மேலும் கன்னியாகுமரி கடலில் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் அயராது முயற்சியில் 133 அடி உயரத்தில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவி 25ம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சியில் சிறப்பாக பணிபுரிந்த மாவட்ட வருவாய் அலுவலர், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பொது உட்பட 135 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், ஆதிதிராவிடர் நல பள்ளிகளில் 2023-2024 கல்வி ஆண்டில் 10 மற்றம் 12ம்வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி காட்டிய 2 தலைமை ஆசிரியர்கள்; மற்றும் 33 பாட ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் சார்பில் பள்ளி மற்றம் கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கான கலைத்திருவிழா 2024-2023 நிகழ்ச்சியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் நல பள்ளி மாணவர் விடுதி, அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி, அரசு பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவி விடுதிகளில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல் போட்டிகளில் வெற்றிப்பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், மாவட்ட இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை சார்பில் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டு அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிப்பெற்ற 5 வீரர் வீரங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா வழங்கினார்.
அதனைத்தொடர்ந்து புதுக்கிராமம் ரோஜாவனம் சர்வதேச பள்ளி, பேச்சிப்பாறை அரசு பழங்குடியினர் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி, நாகர்கோவில் டதி மகளிர் மேல்நிலைப்பள்ளி, கண்ணாட்டுவிளை அரசு மேல்நிலைப்பள்ளி, மயிலாடி எஸ்.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் நெய்யூர் மௌண்ட லிட்ரா ஸீ பள்ளி உள்ளிட்ட மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா கண்டுகளித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், மாவட்ட வன அலுவலர் பிராசாந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி (நாகர்கோவில்), மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சுகிதா (பொது), செந்தில் வேல்முருகன் (நிலம்), சாந்தி (வளர்ச்சி), தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சேக் அப்துல் காதர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதாண்டாயுதபாணி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்புலெட்சுமி, மாவட்ட விளையாட்டு அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலர் விஜயமீனா, மாவட்ட பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையினர் நல அலுவலர் செந்தூர் முருகன், கூடுதல் இயக்குநர்கள் ஜெங்கின் பிரபாகர் (வேளாண்மை), இணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் (கால்நடைத்துறை) துணை இயக்குநர்கள் ஷீலா ஜாண் (தோட்டக்கலைத்துறை), சின்ன குப்பன் (மீன்வளத்துறை), நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி இயக்குநர்கள் துவரகநாத் (பேரூராட்சிகள்), சாந்தி (ஊராட்சிகள்), வட்டாட்சியர்கள் முருகன் (அகஸ்தீஸ்வரம்), கோலப்பன் (தோவாளை), ஜூலியன் ஹவர் (விளவங்கோடு), சஜித் (கல்குளம்), ராஜசேகர் (கிள்ளியூர்), கந்தசாமி (திருவட்டார்), மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர்கள் சுப்பிரமணியன் (நிதியியல்), தாஜ் நிஷா, தனி வட்டாட்சியர்கள் வினோத் (தேர்தல்), கண்ணன் (வழங்கல்) உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள், பணியாளர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.