கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெயிலால் மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து இருந்தது.
இந்த நிலையில் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக ஆங்காங்கே மழை பெய்தது. இதனால் கடும் வெயிலால் ஏற்பட்ட சூடு சற்று குறைந்தது. இதனால் மாவட்டத்தின் பல பகுதிகளில் குளிர்ந்த காற்று வீசத் துவங்கியது. இந்த நிலையில் இன்று காலையில் இருந்தே மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது.
/சில நேரங்களில் இடி முழக்கமும் முழங்கியது. இந்த மழையின் வேகம் மாலையில் இருந்து அதிகரிக்க துவங்கியது இரவில் மாவட்டத்தின் பல பகுதிகளில் தண்ணீரை கொட்டியது. அந்த அளவிற்கு மழை வெளுத்து வாங்கியது. இந்த இரவு நேர மழை கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பல பகுதிகளில் பெய்தது.