கன்னியாகுமரி மாவட்டத்தில் உணவு பகுப்பாய்வு வாகனம்

Share others

கன்னியாகுமரி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறையின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலக
முகப்பில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நடமாடும் உணவு
பகுப்பாய்வு செய்யும் வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தெரிவிக்கையில் –

தமிழ்நாடு அரசின் ஆணைக்கிணங்க நடமாடும் உணவு பகுப்பாய்வு கூடம் எனப்படும்
சக்கரங்களில் உணவு பாதுகாப்பு வாகனம் எப்எஸ்எஸ்ஏ ஆல் சிஎஸ்எஸ் திட்டத்தில்
வழங்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் சென்னை மற்றும் மதுரை உணவு
பகுப்பாய்வுக் கூடங்களின் கட்டுப்பாட்டில்

தலா ஒரு வாகனம் இயங்கி வருகிறது.
மதுரையினை மையமாகக்கொண்டு

வியாபாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு
பகுப்பாய்வு குறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறது. இந்த வாகனத்தில் மேற்கொள்ளப்படும் பரிசோதனையானது அவர்களிடையே நல்ல சுகாதாரமான சத்தான

உணவை உட்கொள்ள ஒரு தூண்டுகோலாக அமைகிறது. ஏற்கனவே இவ்வாகனமானது
மதுரை, விருதுநகர், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் சுற்றுப்பயணத்தை
முடித்துவிட்டு தற்போது கன்னியாகுமரி மாவட்டம் வந்துள்ளது.
கன்னியாகுமரி மற்றும் தென்காசி முதலான தென்மாவட்டங்களில் தொடர்ந்து விழிப்புணர்வு

சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. பொதுமக்கள், வியாபாரிகள்,
மாணவர்கள் மூலம் பரிசோதனைக்காக பெறப்படும் உணவு பொருட்கள் இவ்வாய்வகத்தில் மேற்கொள்ளப்படும்
எளிய பரிசோதனை மூலம் அப்பொருளின் தரம் கண்டுபிடிக்கப்படுகிறது.
குறிப்பாக பால் மற்றும் பாலில் செய்த உணவு பொருட்கள், சமையல் எண்ணைய்
மற்றும் கொழுப்புகள், மசாலா பொருட்களில் கலப்படம், குடிதண்ணீரில் உள்ள பிஹெச் அளவு.
உப்பில் என்ஏசிஎல் சோதனை, தானிய மற்றும் தானியத்தில் செய்யப்பட்ட உணவு பொருட்கள்.
குளிர்பானங்களில் கலந்துள்ள நிறமிகள் மற்றும் சர்க்கரையின் அளவு. பருப்புவகைகளில்
உள்ள நிறமிப்பொருட்கள், கோதுமை மாவில் இரும்புச்சத்து இருப்பதை கண்டறிதல்,
தேயிலை மற்றும் மிளகாய் தூளில் நிறமிப்பொருட்கள் கொத்தமல்லி மற்றும் வெல்லத்தில்
சல்பாரிக் அமிலம், சமைத்த உணவில் எம்எஸ்ஜி போன்றவைகள் கண்டறியப்பட்டு பொருள்
தரமானதா, இல்லையா என்ற சான்று வழங்கப்படுகிறது.
மாவட்ட நியமன அலுவலர் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மூலம் நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். மேலும் புகார்களை 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மூலமாகவும்
தெரிவிக்கலாம்.

மேலும் இவ்வாகனத்துடன் இணையும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சுகாதாரமான
உணவு தயாரிப்பு மற்றும் கடைகளில் வாங்கும் பொருட்களில் லேபிலில் உள்ள தயாரிப்பு
தேதி, காலாவதி தேதி மற்றும் பிற விபரங்களினை பொதுமக்கள். வியாபரிகள் மற்றும்
மாணவர்களுக்கு விளக்குவார்கள், உணவில் கலப்படம் குறித்து கண்டுபிடிக்கும் எளிய
பரிசோதனைகளை இவ்வாய்வகத்திலிருந்து வரும் பகுப்பாய்வாளர். மாணவ மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு செய்து காட்டுவர். விழிப்புணர்வு காணொளிகள் ஒளிபரப்பாகும். வியாபாரிகளுக்கு தேவையான விளக்கங்கள் வழங்கப்படும். பாதுகாப்பான உணவு இயற்கை உணவினை பயன்படுத்துதல் சம்பந்தமாக பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த மாவட்டங்களில் வாகனம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது அனுமதியினை மாவட்ட நியமன அலுவலரை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளலாம். தற்போது இவ்வாகனத்தில் உணவு பரிசோதனையானது முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. ஆகவே இவ்வாய்ப்பினை பொது மக்கள் வியாபாரிகள் பள்ளி கல்லூரி மாணவர்கள் மத்தியில் உணவு கலப்படம் மற்றும் உணவு பகுப்பாய்வு குறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்தி பயன்படுத்திக்கொள்ளலாம் இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்குமார், நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) மீனாட்சி, துறை அலுவலர்கள் தனியார் உணவாக உரிமையாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *