கன்னியாகுமரி மாவட்ட வருவாய் துறையின் சார்பில் பல்வேறு பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட வயல் தெரு, இருளப்பபுரம், வட்டவிளை, வேதநகர், தாமஸ் நகர், வட்டவிளை சானல் ரோடு உள்ளிட்ட வீடுகளில் வசிக்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்ட பயனாளிகள் குறித்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் நேரில் பார்வையிட்டு மேலாய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கலைஞர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு அந்த விண்ணப்ப படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் 4 லட்சத்து 19 ஆயிரம் பேர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கி உள்ளார்கள். இந்த விண்ணப்ப படிவங்களில் ஒரு சில விண்ணப்ப படிவங்களில் குறைபாடுகள் இருந்ததை அடுத்து அந்த விண்ணப்ப படிவங்களை கள ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நியாய விலை கடை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், பொதுப்பணித்துறை, சுகாதார துறை உட்பட அனைத்து துறை ஊழியர்களும் வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். பூர்த்தி செய்து வழங்கப்பட்ட விண்ணப்ப படிவங்களில் உள்ள குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்து வழங்க பொது மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தெரிவித்தார். நடைபெற்ற மேலாய்வில் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், வருவாய் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.