களியக்காவிளை
வேளாங்கண்ணி (வழி) மார்த்தாண்டம்,
கருங்கல், குளச்சல், நாகர்கோவில் மார்க்கத்தில் கிழக்கு கடற்கரை சாலையில்
இயங்கி வரும் பேருந்து செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் மிகக்குறைவான
பயணி பயன்பாடுடனும் மாறுபடும் செலவினங்களை ஈடுகட்டும்
நிலையில் கூட வசூல் ஈட்டுவதில்லை. மேலும், மேற்கண்ட வழித் தடத்தில் அரசு
விரைவு போக்குவரத்து கழகம் தினசரி ஏழு (7) பேருந்துகளை இயக்கி வருகிறது.
இப்பேருந்துகளை பயணிகள் தேவை பேரில் பயன்படுத்தலாம். எனவே செவ்வாய்
மற்றும் புதன் கிழமைகளை தவிர பிற அனைத்து தினங்களிலும் களியக்காவிளை
வேளாங்கண்ணி நாகர்கோவில் மண்டல பேருந்தை தடங்கல் இல்லாமல்
இயக்கம் செயல்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.