தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ள இணையதளத்தை நாடும் மக்களுக்கு கள ஆய்வில் உள்ளதாக பதில்கள் கிடைக்கிறது. இவர்கள் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்து, அதனை செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தி உள்ளது. இதன் மூலம் தற்போது வரை ஒரு கோடியே ஆறு லட்சத்து 50 ஆயிரம் பெண்களுக்கு உரிமை தொகை வழங்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்கள் என்ன என்று குருஞ்செய்திகள் வரும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் கொஞ்சம் பேருக்கு குருஞ்செய்திகள் வந்து உள்ளது. அதேநேரத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்ததில் பல பெண்களுக்கு குருஞ்செய்திகள் இதுவரை வரவில்லை . இவர்கள் மற்றவர்களை போல் தங்களுக்கும் குருஞ்செய்திகள் வரும் என்று நம்பிக்கையோடு இருந்து வந்தனர். ஆனால் இதுவரை வராததால் தங்களுடைய ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், ரேசன் கார்டு, மின் இணைப்பு அட்டை இவைகளை எல்லாம் கொண்டு இ சேவை மையத்தில் முகாமிட்டு வருகின்றனர். இதில் பல இ சேவை மையங்களில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையா என்று கேட்பதோடு சரி மற்ற விண்ணப்பங்களை போல் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று பெண்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் இணையதளங்களில் தங்கள் ஆதார் எண்ணை உள்ளிடும்போது விண்ணப்பங்கள் கள ஆய்வில் உள்ளதாக தகவல்கள் வருகிறது. இப்படி கள ஆய்வில் உள்ளதாக தகவல்கள் வரும் பெண்கள் என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.