கன்னியாகுமரி மாவட்டம், காவலர்களுக்கு இடையே புத்துணர்ச்சி எற்படுத்தும் விதமாக பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி இன்று (11 ம் தேதி) மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கு இடையேயான தடகளம், வாலிபால், கோ கோ,இறகுபந்து, கபடி போன்ற விளையாட்டு போட்டிகள் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது.
மேலும் தாலுகா காவல்நிலைய காவலர்களுக்கு இடையேயான விளையாட்டுப்போட்டிகள் நாளை (12-01-2024) நடைபெற உள்ளன. அடுத்த நாள் காவலர் குடும்பங்களுக்கான விளையாட்டு போட்டிகளும் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.