குமரி மாவட்டத்தில் செயல்படும் திருப்புமுனை போதை நோய் நலப்பணி மற்றும்
போதைநோய் நலப்பணிகளின் கூட்டமைப்பு சார்பில் குமரி மாவட்டத்தில் முதல்முறையாக
புதுமையான வடிவில் க்யூ ஆர் கோட் மூலமாக போதை விழிப்புணர்வு டிஜிட்டல்
கண்காட்சி சங்கமம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
டிஜிட்டல் விழிப்புணர்வு கண்காட்சி சங்கம நிகழ்வில் போதை நோய்கள் குறித்த
விழிப்புணர்வு குறும்படங்கள், பாடல்கள், மின்நூல்கள், விழிப்புணர்வு உரைகள்,
ஆடியோக்கள்,விழிப்புணர்வு போஸ்டர்கள், போதை நோய் குறித்த சிகிச்சைக்கு
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரிகள் என அனைத்து தகவல்களும் டிஜிட்டல்
வடிவில் கண்காட்சியாக வைக்கப்படும். இவைகளை யாவரும் பதிவேற்றம் செய்து
பார்க்கலாம், அதை பயன்படுத்தலாம்,பிறருக்கும் விழிப்புணர்வுக்காக பகிரலாம்.
செல்போனில் உள்ள கியூ ஆர் கோட் ஸ்கேனர்
பயன்படுத்தி அனைத்து விதமான போதை விழிப்புணர்வு தரவுகளையும் பெறலாம்.
மேலும் ஜி பே, பே டிஎம், போன் பே போன்ற பிரபலமான ஆப்களை பயன்படுத்தியும்
டிஜிட்டல் தரவுகளை பதிவிரக்கம் செய்து பயன்படுத்த முடியும்.
வருகிற ஜூன் மாதம் 25ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோவில்
ஆசாரிப்பள்ளம் சாலையில் உள்ள திருப்புமுனை போதை நோய் அலுவலக வளாகத்தில்
(பிஷப் ஹவுஸ்) வைத்து இந்த டிஜிட்டல் கண்காட்சி நடைபெறும்.
டிஜிட்டல் கண்காட்சி சங்கமத்தின்தொடர்ச்சியாக கியூ ஆர் கோட் மூலம்
பயன்படுத்தப்பட்ட அனைத்து கியூ ஆர் கோட் படங்களையும் மாநிலம் மட்டுமின்றி
உலகம் முழுவதும் உள்ள அனைவரும் பயன்படுத்தி விழிப்புணர்வு பெறுவதற்காக,
சமூக ஊடகங்களிலும்,குழுக்களிலும், தனிநபர்களுக்கும் பகிரப்படும். இந்த கியூ ஆர் கோட் படங்களை பயன்படுத்தி அனைத்து விதமான போதை
குறித்த தகவல்களையும் அவரவர் இடங்களில் இருந்தே தெரிந்து கொள்ள வழிவகை
செய்யப்படும்.
குமரி மாவட்டத்தில் இத்தகைய புதுமையான முயற்சி முதன் முறையாக
நடத்தப்படுகிறது. இதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தொடர்ந்து ஆண்டுதோறும்
நடத்தவும் திருப்புமுனை போதை நோய் நலப்பணி மையம் திட்ட மிட்டு உள்ளது.
போதை நோய் விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியீடு.
டிஜிட்டல் கண்காட்சியில் ஒரு பகுதியாக போதை நோய் விழிப்புணர்வு குறித்த
ஸ்டிக்கர் வெளியிடப்படும்.வெளியிடப்பட்ட ஸ்டிக்கர் அங்கு வருகை தந்து இருக்கும்
நபர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பயன்படுத்தும் இருசக்கர வாகனங்களில் ஒட்டவும்
இதன் மூலம் விழிப்புணர்வு நிகழ்வை நடத்தும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என்று
திருப்புமுனை போதை நோய் நலப்பணி மையத்தின் இயக்குனர்
அருள்பணி பிரான்சிஸ் சேவியர் நெல்சன் பத்திரிக்கையாளர்
சந்திப்பு நிகழ்வில் தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்புகான நிகழ்வை திருப்புமுனை செய்தி
தொடர்பு பொறுப்பாளர் அருள் குமரேசன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக
செய்திருந்தனர்.