கடற்கரை மேலாண்மை மண்டல வரை படத்தில் குமரி மாவட்ட 41
மீனவ கிராமங்கள் மாயம்
தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணி. சர்ச்சில்
கோரிக்கை.
இந்திய அரசானது கடற்கரை மேலாண்மை மண்டலம் வரை படம்
தயாரித்துள்ளது. இந்த வரை படத்தில் 48 கடற்கரை கிராமங்களில்
41 கடற்கரை கிராமங்கள் மாயமாகி உள்ளது. சர்வதேச சுற்றுலா
இடமான கன்னியாகுமரியும் நெத்திலி மீனுக்கு பெயர் பெற்ற
கோவளம் இந்தியாவின் சுதந்திரத்திற்கு முதல் வெற்றி பெற்று தந்த
குளச்சல் கிராமம் அங்குள்ள போர் நினைவு சின்னம் மற்றும்
குளச்சல் அமைந்துள்ள மீன்வளத் துறை அலுவலகம் கூட
குறிக்கப்படவில்லை . ஆழ்கடல் மீன் பிடிப்பதற்கு பெயர் பெற்ற
தூத்தூர் முதலான 41 மீன்பிடி கிராமங்கள் வரை படத்தில்
தவிர்க்கப்பட்டு உள்ளது. மேலும் இந்த வரை படத்தில் மீனவர்களுடை ய
கிராமங்களோ, வாழ்விடங்களோ வாழ்வாதார இடங்களோ, மீன்
உணர்த்தும் இடங்களோ, மீன்பிடி படகுகள் நிறுத்தும் இடங்களோ,
கடலிலே மீன்கள் உற்பத்தியாகும் இடங்களோ மற்றும் கரையில்
மீனவர்களது தேவாலயங்கல் , வழிபாட்டு ஸ்தலங்கள்,
பள்ளிக்கூடங்கள், மீனவர் ஓய்வு அறை கள் மீனவர் நினைவு
இடங்கள் என்று எதுவுமே குறிப்பிடப்படவில்லை . இதற்கு முழு
பொறுப்பை குமரி மாவட்ட நிர்வாகமும் குமரி மாவட்டத்தில
மீன்வளத்துறை அதிகாரிகளும் ஏற்க வேண்டும் ஏனென்றால்
கடற்கரை ஒழுங்குமுறை அறிவிப்பானை 2011 படி ஒவ்வொரு
மாவட்டத்திலும் மூன்று மீனவர்கள் உட்பட்ட மாவட்ட
ஆட்சியாளர் தலைமையான ஒரு குழுவை அமைக்க வேண்டும்.
அந்தக் குழு கடற்கரை மேலாண்மை மண்டல மற்றும் ஒழுங்குமுறை மண்டல திட்டங்கள், ஆய்வுகள் செய்கின்ற பொழுது
இந்த குழுக்கள் உடனிருந்து செய்ய வேண்டும் என்று
குறிப்பிட்டுள்ளது. ஆனால் குமரி மாவட்டத்தில் இதுவரையும் இந்த
மூன்று மீனவர் உட்பட்ட குழுக்கள் முறை யாக அமைக்கப் படவில்லை
, செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படவும் இல்லை . மாவட்ட
ஆட்சியர் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . பசுமை
தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட கடற்கரை மேலாண்மை வரை பட திட்ட
வழக்கில் நீதி அரசர் அவர்கள் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு
மாவட்டத்தில் உள்ள மீன்வளத்துறை அதிகாரிகள் அவர்கள்
கட்டுப்பாட்டில் உள்ள மீனவர்களது பயன்பாட்டு இடங்கள்
வாழ்வாதாரங்கள் குடியிருப்புகள் மீன் இறக்கும் தளங்கள் மீன்பிடித்
துறை முகங்கள் மீன் உணர்த்தும் இடங்கள் மீன்பிடி கருவிகள்
நிறுத்தும் இடங்கள் கடலிலே மீன்கள் உருவாகும், தங்குமிடங்கள்
என்று மீனவர்கள் பயன்பாட்டுக்கு உரிய இடத்தை அறிக்கையாக
சம்பத்தப்பட்ட துறைக்கு அனுப்ப வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டு உள்ளது. அதன்படி தமிழக மீன்வளத்துறை ஆணையர்
அவர்கள் ஜூன் மாதம் 12ஆம் தேதியே ஒவ்வொரு மீன்வளத்துறை
உதவி ஆய்வாளர்களுக்கும் ஒரு வாரத்துக்குள் பசுமை
தீர்ப்பாயத்தின் அறிவுறுத்தின்படி மீனவர்கள் பயன்பாட்டு இடங்களை
உடனடியாக முறையாக வரை படமாக வரைந்து அனுப்ப வேண்டும்
என்று வேண்டுகோள் விடுத்தது ஆனால் இதுவரையும்
மீன்வளத்துறை அதிகாரிகள் அவற்றை செயல்படுத்தியதற்கு எந்த
நடவடிக்கை எடுக்கவில்லை . மீனவர்களுக்கு முதல் அதிகாரி
மீன்வளத்துறை அதிகாரி ஆவார். ஆனால் அவர் மீனவர்களை
பாதுகாப்பதற்கு தற்போது இந்த கடலோர மேலாண்மை
வரை படத்தில் மீனவர்களுக்கான பயன்பாட்டு ஸ்தலங்களை
உட்படுத்துவதற்கு எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை என்பது
கண்டனத்திற்கும் வருத்தத்துக்கும் உரியதாகும். என கன்னியாகுமரி
மாவட்டத்தில் நடை பெற்ற மீனவர் குறை தீர்க்கும்
கூட்டத்தில் குமரி மாவட்ட நிர்வாகமும் மீன்வளத்துறை
அதிகாரிகளின் தங்கள் கடமையை உடனடியாக செய்ய வேண்டும்
என தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் பணியாளர்
சர்ச்சில் கண்டன கோரிக்கை முன்வைத்தார்.