கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

இதில் பொதுமக்களிடம் இருந்து கல்வி உதவித்தொகை பட்டா பெயர் மாற்றம் மாற்றுத்திறனாளிகள் நல உதவிகள் முதியோர் உதவி தொகை விதவை உதவித் தொகை குடிநீர் வசதி சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் கோரி 142 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

அதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், தனித் துணை ஆட்சியர் புகாரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரன், உசூர் மேலாளர் ( குற்றவியல்) சுப்பிரமணியன் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர்.