மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின் சுகாதாரப்பணி மையமான ஹோம் அமைப்பின்
முதன்மைப் பணிகளில் ஒன்றே குழித்துறையில் அமைந்து உள்ள ஹோம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சிறப்பு பள்ளி.
இந்த சிறப்புப் பள்ளியின் 26-வது ஆண்டு விழாவும், நிறுவனர் தின விழாவும் குழித்துறை மார் எப்ரேம் அரங்கில் வைத்து
நடந்தது. சிறப்பு குழந்தைகள் பேண்ட் வாத்தியம் இசைத்து சிறப்பு விருந்தினர்களை
வரவேற்றார்கள். முன்னதாக நாகர்கோவில், குரியன் ஆபிரகாம் பிரைவேட் லிமிடெட்
நிறுவனத்தின் சி.எஸ்.ஆர் திட்டத்தின்கீழ் குக்கிராமங்களில் இருந்து வருகை தரும் சிறப்பு
குழந்தைகளை பயிற்சி பெற அழைத்து வர பள்ளி வாகனம் ஒன்று அன்பளிப்பாக
வழங்கினார்கள். அந்த வாகனத்தை இயக்குநர் பிரவின் மேத்யூ மற்றும் நாகர்கோவில்,
கானம் லேட்டக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ரெபேக்கா ரெவி ஜாய் ஆகியோர் இணைந்து ஆயரிடம் வழங்கினார்கள். ஆயர் அர்ச்சித்து
கொடியசைத்து பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார். தொடர்ந்து ஹோம் நிறுவனர்
விண்ணில் வாழும் ஆயர் லாரன்ஸ் மார் எப்ரேம் ஆண்டகைக்கு அனைவரும் மலரஞ்சலி
செலுத்தினார்கள்.
ஹோம்-சிறப்பு பள்ளியின் இயக்குநர்/தாளாளர் அருட்தந்தை. அஜீஷ் குமார்
அறிமுக உரையோடு அனைவரையும் வரவேற்றார். ஹோம்-சிறப்பு பள்ளியின் முன்னாள்
இயக்குநர்/தாளாளர் பேரருட்தந்தை. மரிய அற்புதம் நினைவுரை ஆற்றினார்.
சிறப்பு பள்ளியின் தலைமையாசிரியர் டென்னிஸ் சிறப்பு பள்ளியின் ஓராண்டு
கால நிகழ்வுகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். மார்த்தாண்டம் மறைமாவட்டத்தின்
ஆயரும் ஹோம் இயக்கத்தின் மேலாளருமாகிய மேதகு ஆயர். வின்சென்ட் மார் பவுலோஸ்
விழாவிற்கு தலைமை தாங்கி தலைமையுரை ஆற்றினார். ஆயர் தம்
தலைமையுரையில் சிறப்பு பள்ளியின் செயல்பாடுகளையும் தற்போது வரை அது கண்டுள்ள
வளர்ச்சிகளையும் எடுத்துக் கூறினார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தினேஷ் சந்திரன், ரெத்னா நினைவு மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர். மகிழன், ஸ்ரீ தேவி குமாரி மகளிர் கல்லூரியின் முதல்வர் முனைவர் பிந்துஜா,
சுவாமியார்மடம் ரெத்னா நினைவு மருத்துவமனை இயக்குநர் டாக்டர். சாந்தி,
மிட்ஸ் இயக்குநர் அருட்தந்தை. ஜெரோம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். ஸ்ரீ
தேவி குமாரி மகளிர் கல்லூரியின் வணிகவியல் மூன்றாமாண்டு மாணவி சோபிதா தமது கல்லூரியில் சிறப்பு குழந்தைகளின் ஒரு நாள் கல்லூரி வாழ்க்கை குறித்த
தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி
அமுதா தமது உரையில் ஹோம்-சிறப்பு பள்ளியின் மூலம் சிறப்பு
குழந்தைகள் அடைந்துள்ள முன்னேற்றங்களை குறித்து பேசினார்.
சிறப்பு குழந்தைகள் மேற்கத்திய நடனம், நாட்டுப்புற நடனம், பாடல், இசை சிற்பம்
போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்கள். மார்த்தாண்டம் இன்பென்ட்
நடனப்பள்ளி இயக்குநர் மாஸ்டர் அருள் சிறப்பாக பயிற்சி
வழங்கி இருந்தார். சிறப்பு விருந்தினர்கள், குழந்தைகளுக்கு பரிசுகள்
வழங்கி மகிழ்ந்தார்கள். சிறப்பாசிரியை அஜிதா குமாரி நன்றியுரை
வழங்கினார். தன்னார்வலர் அலோசியஸ் அனைத்து நிகழ்வுகளையும்
தொகுத்து வழங்கினார். சிறப்பாசிரியர்கள் நாட்டுப்பண் பாடினார்கள்.
நிகழ்வில் சிறப்பு குழந்தைகள், பெற்றோர்கள், இதர சிறப்பு பள்ளி பிரதிநிதிகள்,
உபகாரிகள், பணியாளர்கள் மற்றும் ஹோம் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் என 300-க்கும்
மேற்பட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
குழித்துறை ஹோம் சிறப்புப் பள்ளி ஆண்டு விழா
