கன்னியாகுமரி மாவட்டம் கோட்டாறு புனித சவேரியார் பேராலய பெருவிழா நவம்பர் மாதம் 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் மாலையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. விழாவின் 10 ம் நாள் காலையில் பெருவிழா திருப்பலி கோட்டாறு மறை மாவட்ட மேதகு ஆயர் நசரேன் சூசை தலைமையில் நடந்தது. தொடர்ந்து மலையாள திருப்பலியும் 11 மணிக்கு தேர்பவனியும் நடந்தது. மாலையில் தேரில் ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது. இந்த பெருவிழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு டிசம்பர் 3 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா உள்ளூர் விடுமுறை அறிவித்திருந்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆலோசனைபடி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடி மாவட்ட உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு இருந்தனர். விழாவை முன்னிட்டு கோட்டாறு பகுதி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்று பாதைகள் வழியாக இயக்கப்பட்டது. இதனால் நாகர்கோவில் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது.