கோ ஆப்டெக்ஸ் விற்பனை

Share others

கன்னியாகுமரி மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் நாகர்கோவில் அண்ணா
பேருந்து நிலையம் அருகிலுள்ள காமராஜர் கட்டிடத்தில் இயங்கி வரும் கோ ஆப் டெக்ஸ் அங்காடியில்
நடைபெறும் தீபாவளி தள்ளுபடி விற்பனையினை ஆட்சியாளர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் முன்னிலையில்
குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையினை துவக்கி வைத்து தெரிவிக்கையில்:-
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ-ஆப்டெக்ஸ் கடந்த 88 ஆண்டுகளாக தமிழக
கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும்
உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலமாக விற்பனை செய்து நெசவாளர்களுக்கு
தொடர்ந்து வேலை வாய்ப்பினை வழங்கி பேருதவி புரிந்து வருகிறது.
காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளைக் கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில்
கோ-ஆப்டெக்ஸ் சேலைகள் மற்றும் இதர ரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை
செய்யப்படுகின்றன.


கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும்
தீபாவளி பண்டிகையின்போது தமிழக அரசு வழங்கும் 30 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி விற்பனை திட்டத்தை
நடைமுறைப்படுத்தி வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை
மென்பட்டு புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி தஞ்சை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்பட்ட
பட்டுபுடவைகள் திருப்புவனம் பட்டு சேலைகள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்களின்
கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை
உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு இரகங்கள் பருத்தி சட்டைகள் திரைச்சீலைகள், நைட்டீஸ்,
மாப்பிள்ளைசெட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாகத் தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் “கனவு நனவு திட்டம்” என்ற சேமிப்பு திட்டத்தினை
செயல்படுத்தி வருகிறது. இதன்படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு
11-வது மற்றும் 12-வது சந்தா தொகையை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி மொத்த முதிர்வு தொகைக்கு
தேவைப்படும் துணிகளை 20 சதவீத அரசு தள்ளுபடியுடன் வழங்கப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில் குமரி விற்பனை நிலையம், தக்கலை விற்பனை
நிலையம், மார்த்தாண்டம் விற்பனை நிலையம், கன்னியாகுமரி விற்பனை நிலையம், வளாக
விற்பனைக்குழு என ஐந்து கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த
தீபாவளி 2022-ஆண்டு பண்டிகை காலத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐந்து விற்பனை
நிலையங்களிலும் ரூ.2.83 கோடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது தீபாவளி 2023-ம் ஆண்டிற்கு
ரூ.6 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள், அரசு அலுவலர்கள்
உள்ளிட்டோர்கள் கைத்தறி நெசவாளர்கள் வாழ்வாதாரம் சிறக்க கைத்தறி துணிகளை வாங்கி
ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், தெரிவித்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, தலைமை அலுவலக
முதன்மை பொதுமேலாளர் அலோக் பாப்லே, கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி மண்டல மேலாளர்
ராஜேஷ்குமார், மாமன்ற உறுப்பினர் கௌசிகா கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய
மேலாளர் பத்மராஜ், அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ்
ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *