கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப் பள்ளியில் 1992 ம் ஆண்டு பிளஸ் 2 படித்த பேச் சந்திப்போம் மகிழ்வோம் நிகழ்வு மூலம் ஒரு நாள் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். நீண்ட நாட்களாக தன்னுடன் படித்தவர்களை சந்திக்க வேண்டும் அவர்களை பார்க்க வேண்டும் அவர்களுடன் பேச வேண்டும் என்று மனதில் பல எண்ணங்கள் ஓடலாம். ஆனால் சந்திக்கவோ பேசவோ முடியாது. ஏனென்றால் இன்று போல் தகவல் தொடர்புகள் இல்லாதது தான். அப்படியே காலங்கள் கடந்து சென்றுவிட்டது. அதேவேளையில் ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் பணியின் நிமித்தமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ இருந்து வரலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருநாள் இவர்கள் சந்தித்தால் எப்படி இருக்கும் என்பது இந்த சந்திப்புகளில் கலந்து கொண்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.