மாநில தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலரின் அறிவுரையின்படி, பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, தமிழகத்தில் வாக்குப்பதிவு வருகின்ற 19.4.2024 அன்று நடைபெற உள்ளதால், சிவகங்கை மாவட்டத்தில் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாளான 18.4.2024-ம் தேதி வருகை புரிந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் திறன் சாரா பணியாளர்களுக்கு தங்கள் வாக்கினை செலுத்திட ஏதுவாக 19.4.2024 அன்று சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.