
கன்னியாகுமரி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில், நாகர்கோவில்
பெருவிளை பகுதியில் அமைந்துள்ள கானம் லேக்டெக்ஸ் நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர், சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை
ஏற்றுக்கொண்டு, பேசுகையில் –
நமது நாட்டின் நல்ல குடிமகனாகவும் பூமியில் பொறுப்புள்ள குடிமகனாகவும் காற்று
மாசுபாட்டை குறைப்பதற்காக அருகிலுள்ள இடங்களுக்குச் செல்லும்போது நடந்து செல்ல
வேண்டும் அல்லது சைக்கிளை பயன்படுத்த வேண்டும். பொது போக்குவரத்தை பயன்படுத்த
வேண்டும். நமது வீட்டில் உள்ள எந்த கழிவுகளையும் எரிக்க கூடாது. அன்றாட வாழ்வில்
பொருட்களை மறுசுழற்சி செய்து பயன்படுத்த வேண்டும். அதிக மரங்களை நட வேண்டும்.
வீட்டிலேயே கழிவுகளை மூலப் பிரிவினை செய்து கழிவுகளை குறைக்க வேண்டும்.

ஒரு
முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
ஷாப்பிங் செல்லும்போது துணி பையை எடுத்து செல்ல வேண்டும். காற்று மாசுபாடு மற்றும்
அதன் விளைவுகள் குறித்து அக்கம் பக்கத்தில் உள்ள பொதுமக்கள், நண்பர்கள் மற்றும்
குடும்பத்தினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். வருங்கால தலைமுறைகளுக்கு
சுத்தமான காற்றினை வழங்குவது நம் அனைவரின் கடமையாகும். இவ்வாறு மாவட்ட
ஆட்சியாளர் ஸ்ரீதர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
தலைமையில் சர்வதேச காற்று தினத்தை முன்னிட்டு கானம் லேக்டெக்ஸ் கம்பெனி
வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு, மஞ்சப்பைகளை அனைவருக்கும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கானம் லேக்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் பிரவின்
மேத்யூ, மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.