சிவகங்கை மாவட்டம்,
பாராளுமன்ற பொது தேர்தல்-2024ஐ முன்னிட்டு, வாக்குப்பதிவு நாளான இன்றையதினம் (19.04.2024), மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியாளர் ஆஷா அஜித் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்து உள்ள மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தார். அதேபோல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவின் உமேஷ் சிவகங்கை பிரிட்டோ நகர் புனித பிரான்சிஸ் நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வரிசையில் நின்று வாக்களித்தார்.
31- சிவகங்கை பாராளுமன்ற தொகுதி.
காலை 9 மணி நிலவரப்படி, வாக்குப்பதிவு –
07.21 சதவீதம் பதிவாகி உள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் இருந்து குமரி குரல் பத்திரிகை செய்தியாளர் P. செல்வநாதன் மற்றும் ஸ்பெஷல் டீம்
சிவகங்கை பாராளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு நிலவரங்களை குமரி குரல் பத்திரிகை ஸ்பெஷல் டீம் களத்தில் இருந்து உடனுக்குடன் தொடர்ந்து பார்க்க kumarikural.in