சுமார் ஒரு கோடி மதிப்பு உள்ள சொத்து பத்திரத்தை வாங்கி கொண்டு முதியவரை விரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்க
கோட்டாச்சியரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்த முதியவர்.
கன்னியாகுமரி மாவட்டம்
கணபதிபுரம் அடுத்த பரமன்விளையை சேர்ந்த முதியவர் தவசி மணி(68)
சுகர் நோயால் பாதிக்கப்பட்டு காலில் இரண்டு விரல்களை எடுத்து கட்டிய நிலையில் தள்ளாடி நண்பர் உதவியுடன்
நாகர்கோவில் கோட்டாச்சியரிடம் மனு அளித்தார்
அந்த மனுவில் கூறியிருப்பதாவது
எனது மகன் சுமார் ஒரு கோடி மதிப்பில் உள்ள எனது சொத்து பத்திரத்தை எடுத்து வைத்து விட்டு வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டான்
மேலும் நான் சுகர் நோயால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தேன்
என்னுடன் இருந்து கூட மகன் வரவில்லை ஒரு வேளை சாப்பாட்டிற்கு கூட கஷ்டப்படுவதாகவும் தற்போது அக்கம் பக்கத்தினர் எனக்கு உதவி செய்வதாகவும்
எனவே சமூகம் என் மனு மீது விசாரணை நடத்தி என் மகன் அபகரித்து வைத்து உள்ள சொத்து பத்திரத்தை மீட்டு தருவதோடு எனது உயிருக்கும் பாதுகாப்பு வழக்கும் மாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.