முன்னாள் மாணவர்கள் சேர்ந்து பள்ளி பருவத்தில் படித்தவர்கள் எல்லாம் இணைந்து சந்தித்து ஒரு நாள் செலவழிப்பது என்பது சந்திப்பவர்கள் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி நிலவுகிறது என்பதை நிருபிக்க தொடங்கி தொடர்ந்து 13 ஆண்டுகள் தங்களுடைய சந்திப்பை தொடர்கிறார்கள் என்றால் அதை சாதாரணமாக எடுத்து கொள்ள முடியாது. பொதுவாக பல ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் சந்திப்பதை பல நிலைகளில் நடத்தி வருகின்றனர். இவைகள் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் நடக்கிறதா என்றால் சந்தேகத்தை தான் ஏற்படுத்தும். இந்த சந்தேகத்தை எல்லாம் நிஜம் என நிருபித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் டதி தமிழ் தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கத்தினர்.
2024 ம் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு எப்படி இருந்தது. அவர்கள் தங்கள் சந்திப்பை எந்த இடத்தில் நடத்தினார். 13 வருடங்களாக தொடர்ந்து சப்பாடு வழங்கி வரும் முன்னாள் மாணவர் யார் போன்ற பல கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள். எங்களுடைய பாட்டி, தாத்தா இவர்களின் பள்ளி பருவத்தினர் எப்படி எல்லாம் இருக்கிறார்கள் என்பதை நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டாமா என்று குட்டீஸ்களின் ஒரு நாள் பயணம் என ஒரே ஜாலியான கொண்டாட்டமே என்று தெரிவிக்கின்றனர்.
டதி தமிழ் தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் 13 வது குடும்ப கூடுகை நாகர்கோவில் வாட்டர் டேங்க் ரோட்டில் உள்ள தி ஆர்க் பார்ட்டி ஹாலில் நடந்தது.