
கன்னியாகுமரி மாவட்ட பொதுப்பணித்துறை சார்பில் தக்கலை அரசு மேல்நிலைப்
பள்ளி வளாகத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட புத்தக கூடத்தினை
பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், திறந்து வைத்து
தெரிவிக்கையில்;-
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்,
ஆட்சிப்பொறுப்பேற்ற நாளிலிருந்து பொதுமக்களின் தேவைகளை அறிந்து
அவர்களுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து பிற மாநிலங்களே வியந்து பாராட்டும்
வகையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் குறிப்பாக அனைத்து பகுதிகளிலும் சாலை
வசதிகள், குடிநீர் வசதி, ஏரி குளங்களை தூர்வாரும் பணிகள், மகளிருக்கென கலைஞர்
மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம், பள்ளி கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு
துறைகளுக்கு தேவையான புதிய கட்டிடங்கள், புதிய நூலகங்கள் அமைக்கும் பணிகள்
உள்ளிட்ட ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில், பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்
திட்டத்தின்கீழ் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.26 லட்சம் மதிப்பில்
புதிய புத்தக கூடத்தினை மாணவர்களின் பயன்பாட்டுக்காக திறந்து
வைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பால்வளத்துறை அமைச்சர்
மனோதங்கராஜ் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்
பால தண்டாயுதபாணி, மாவட்ட கல்வி அலுவலர் (மார்த்தாண்டம்) மாரிமுத்து,
பத்மநாபபுரம் நகர்மன்ற தலைவர் அருள் சோபான், நகர்மன்ற ஆணையர் லெனின்
அரசு வழக்கறிஞர் ஜெகதேவ் உள்பட தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவ
மாணவிகள், உள்ளாட்சி பிரிதிநிதிகள் பலர் கலந்து கொண்டார்கள்.