தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி
மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியானது நாகர்கோவில் மகளிர்
கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில்
நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்
கலந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவியர்களிடையே பேசுகையில்:-
திருவள்ளுவர் பிறந்த தமிழ் மண்ணில் இருந்து தமிழர்களின் மரபு பற்றி பேசுவதில்
பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. கல் தோன்றி மண் தோன்றா காலத்தில் வாளோடு
முன்தோன்றிய மூத்த குடியினராக நமது தமிழ் சமுதாயம் சிறப்பிக்கப்படுகின்றது. தமிழ்
பண்பாட்டிலே ஆதி காலத்தினுடைய வரலாறுகளை
கன்னியாகுமரி மாவட்டம். மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் நடைபெற்றுவரும் மாபெரும் தமிழ்
நினைவுகூறும் வகையில்
கனவு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.
தமிழ் பண்பாடு என்பது தனித்துவமானதோடு. மிகவும்
அனைத்துத்தரப்பட்ட பொதுமக்களையும் சகோதரத்துவத்துடன் கருதுவது தான் தமிழ் பண்பாடு.
அதே நேரத்தில் உலகத்திலுள்ள அனைத்து மக்களையும் இணைப்பதும் தமிழ்
பண்பாடு என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
/அதேபோல் தமிழுக்கும்
கனவு இருக்கிறது அது என்னவென்றால் நமது முதியோர்கள் நமக்கு கற்பித்த பண்பாடு
அறண்களை பின்பற்றி அனைவரும் நல் உள்ளம் கொண்டவர்களாக வாழ வேண்டுமென்பது
தமிழ்க்கனவு நோக்கமாகும்.
இந்த மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள மாணவ,
மாணவியர்களாகிய நீங்கள் அனைவரும் தமிழ் பண்பாடு குறித்து நடைபெறும்
கருத்தரங்குகளில் கலந்து கொண்டும். தமிழ்மொழி குறித்த வரலாற்று புத்தகங்களை
படித்தும், இணையவழியாக தமிழ் மரபுகள் குறித்த தகவல்களையும் தெரிந்து கொள்ள
முன்வர வேண்டும்.
//
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக செழித்தோங்கிய பண்பாடு நமது தமிழர் பண்பாடு.
அந்த வகையில் அனைவரும் நமது தமிழ் மரபு மற்றும் பண்பாட்டினையும், தமிழின்
செழுமை குறித்தும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். முக்கியமாக தமிழர்களின் பாரம்பரிய
கலை வடிவங்கள், இலக்கியம், அன்றைய காலக்கட்டங்களில் வழங்கப்பட்ட கல்வி
முறைகள் போன்ற கூறுகளை ஒவ்வொரு மாணவ, மாணவியர்களும் அறிந்து கொண்டு
அடுத்த தலைமுறையினர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பதே தமிழ் கனவு
நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
மேலும் தமிழ்நாடு அரசு தமிழ்வழிக்கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு
பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறது. குறிப்பாக புதுமைப்பெண் திட்டத்தின்கீழ்
அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவியர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம். மாவட்ட
வேலைவாய்ப்பு துறையின் சார்பில் மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளை
எதிர்கொள்வதற்கான சிறப்பு வகுப்புகள், முதலமைச்சர் அவர்களின் காலை உணவுத்திட்டம்
உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறது என்பதை
தெரிவித்துக்கொள்கிறேன்.
இக்கூட்டத்தில் வருகை தந்துள்ள மாணவ, மாணவியர்களாகிய உங்களிடையே தனித்திறமைகள் உள்ளது.அத்திறமைகளை வெளி கொணர்ந்து வாழ்வில்
முன்னேற்றமடைய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு
ஆட்சியாளர் ஸ்ரீதர் பேசினார்.
//
அதனைத்தொடர்ந்து, பாடலாசிரியர் மற்றும் கவிஞர் அறிவுமதி மாணவ,
மாணவியர்களிடையே கருத்துரை வழங்கியதோடு மாபெரும் தமிழ்க்கனவு மற்றும் நெய்தல் நிலம் சார்ந்த கல்லூரி மாணவ மாணவிகள் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் நடந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சியில் பெருமிகு செல்வி கேள்வியின் நாயகன் மற்றும் கேள்வியின் நாயகி ஆகிய விருதுகளை மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் கல்லூரி மாண மாணவர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் அறிவுமதி, மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி முதல்வர் உஷா, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் ராஜேஷ், உசூர் மேலாளர்கள் சுப்ரமணியம் (குற்றவியல்), ஜூலியன் ஹூவர், கல்லூரி பேராசிரியர்கள், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி, ஹோலி கிராஸ் மகளிர் கல்லூரி, பயோனிர் கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி, தெ.தி இந்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.