கலைஞர் நூற்றாண்டு விழா மகளிரணி பயிற்சிப் பாசறைக் கூட்டம் திருவிதாங்கோடு பெரியநாயகி அரங்கத்தில் திமுக மாநில மகளிரணி பொதுச் செயலாளர் ஹெலன் டேவிட்சன் தலைமையில் நடந்தது. தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் உட்பட பலர் பேசினார்கள்.
கூட்டத்தில் திமுக துணை பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பங்கேற்று பேசினார். கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கனிமொழி எம்.பி. கலந்து கொண்ட இந்த கூட்ட மேடையில் புகை வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து குமரி குரல் பத்திரிகை ஸ்பெஷல் டீம்