கன்னியாகுமரி மாவட்ட காவல் அலுவலகத்தில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு.
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் தலைமையில் காவல் அலுவலகத்தில் வைத்து நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர், காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
உறுதிமொழி
நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வுபூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல் பேச்சுவார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக்கொள்வேன் என்றும் நான் உளமார உறுதி கூறுகிறேன்.